முகப்பு
இந்தியா

எம்.பி. பதவி ராஜிநாமா? யஷ்வந்த் சின்ஹா எச்சரிக்கை

ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவராக ரவீந்திரா ராய் நியமிக்கப்பட்டதை எதிர்த்து மக்களவை எம்.பி. பதவியை

Updated On : 12 மார்ச் 2013, 3:33 am IST
பகிர்:

ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவராக ரவீந்திரா ராய் நியமிக்கப்பட்டதை எதிர்த்து மக்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா எச்சரித்துள்ளார்.

ஜார்க்கண்டைச் சேர்ந்த யஷ்வந்த் சின்ஹாவுக்கும், அந்த மாநில முன்னாள் முதல்வர் அர்ஜுன் முண்டாவுக்கும் பாஜகவில் பனிப்போர் நீடித்து வருகிறது. கடந்த காலங்களில் முண்டா அரசு செயல்திறனற்றது என்றும் ஊழல் அரசு என்றும் சின்ஹா விமர்சிதுள்ளார். இந்நிலையில், முண்டாவுக்கு நெருக்கமான ரவீந்திர ராயை ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவராக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை நியமித்தார்.

தமக்கு மாநிலத் தலைவர் பதவி கிடைக்கும் என்று நினைத்திருந்த யஷ்வந்த் சின்ஹாவுக்கு இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

அவர் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற பா.ஜ.க. நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இப்பிரச்னையை எழுப்பினார். ரவீந்திர ராய் நியமனத்தை எதிர்த்து எம்.பி. பதவியை ராஜிநாமா செய்யப் போவதாகவும் எச்சரித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.