முகப்பு
இந்தியா

ஹெலிகாப்டரில் தப்பிய குற்றவாளி பிடிபட்டார்

திரைப்படக் காட்சியைப் போல, பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய நபர், விபத்தில் அடிபட்டவர் போல நடித்து

Updated On : 12 மார்ச் 2013, 3:31 am IST
பகிர்:

திரைப்படக் காட்சியைப் போல, பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய நபர், விபத்தில் அடிபட்டவர் போல நடித்து ஹெலிகாப்டரில் தப்பி உள்ளார். எனினும், பின்னர் அவரை போலீஸார் கைது செய்தனர்.

ஜம்மு காஷ்மீரின் மனூர்கலா என்ற இடத்தில் சமீபத்தில் சாலை விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்தவர்களை, மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா பயன்படுத்தும் ஹெலிகாப்டர் மூலம் ஜம்மு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்த ஹெலிகாப்டர் மூலம் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பர்வேஸ் அஹமது என்பவர் தப்பிச் செல்ல திட்டமிட்டார். அவர், விபத்தில்  காயமடைந்தவர் போல செயற்கையாக காயங்களை ஏற்படுத்திக் கொண்டு ஹெலிகாப்டரில் ஏறித் தப்பினார். முதல்கட்ட இழப்பீட்டுத் தொகையாக ரூ.5 ஆயிரமும் அந்த நபருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும், ஜம்மு சென்றடைந்ததும் மருத்துவமனைக்கு செல்லாமல் அங்கிருந்து தப்பிய அவர் மீண்டும் மஞ்சகோட் பகுதிக்கு வந்துள்ளார். அவரை போலீஸார் கைது செய்தனர். அவருக்கு வழங்கிய இழப்பீட்டுத் தொகையை பறிமுதல் செய்துள்ளதாக காவல் துறை டி.ஐ.ஜி. டேனிஷ் ராணா கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.