முகப்பு
இந்தியா

காஷ்மீர் அரசைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

இந்தியா - பாகிஸ்தான் எல்லையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க அரசு தவறிவிட்டது எனக் கூறி

Updated On : 2 ஏப்ரல் 2013, 12:55 am IST
பகிர்:

இந்தியா - பாகிஸ்தான் எல்லையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க அரசு தவறிவிட்டது எனக் கூறி ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

இது குறித்து ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் ஜம்மு மாநில மோர்ச்சா (ஜேஎஸ்எம்) எம்.எல்.ஏ. அஸ்வினி சர்மா பேசியதாவது:

போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி பாகிஸ்தான் அடிக்கடி தாக்குதல் நடத்துவதால் ஜம்மு காஷ்மீர் எல்லையோரத்தில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.  பாகிஸ்தானின் குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இதுவரை அரசு யாருக்கும் நிவாரணத்தொகை வழங்கவில்லை என்றார்.

Advertisement

Advertisement

 இதையடுத்து உள்துறை அமைச்சர் சஜத் அகமது பதிலில் திருப்தியடையாத பாஜக, ஜேஎஸ்எம், ஜேகேஎன்பிபி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அரசைக் கண்டித்து கோஷமிட்டனர். அதையடுத்து சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.