முகப்பு
இந்தியா

9 சதவீத வளர்ச்சியை எட்ட கடும் நடவடிக்கை அவசியம்: பிரணாப் முகர்ஜி

மீண்டும் 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு பணவீக்கம், நீதிப் பற்றாக்குறை மற்றும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஆகியவற்றைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தி உள்ளார்.

Updated On : 12 ஏப்ரல் 2013, 1:23 am IST
பகிர்:

மீண்டும் 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு பணவீக்கம், நீதிப் பற்றாக்குறை மற்றும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஆகியவற்றைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தி உள்ளார்.

தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்து இந்திய நிர்வாக சங்கத்தின் (ஏ.ஐ.எம்.ஏ.) விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற முகர்ஜி கூறியது:

இந்திய பொருளாதார வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 9 சதவீதத்தை ஒட்டி இருந்தது. சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக 2011-12இல் 6.2 சதவீதமாக சரிந்தது. 2012-13இல் 5 சதவீதமாக மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

பிப்ரவரி மாதத்தில் பணவீக்கம் 6.84 சதவீதமாக இருந்தது.

இதுபோல, நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டில் 6.7 சதவீதமாக அதிகரித்தது.

இதையெல்லாம் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்காதவரை மீண்டும் 9 சதவீத பொருளாதார வளர்ச்சி இலக்கை எட்டுவது மிகவும் சிரமம் என்றார் முகர்ஜி.

இத்தாலி வீரர்கள் வழக்கு:

மீண்டும் சி.பி.ஐ.க்கு மாற்றம்?

புது தில்லி, ஏப். 11: இத்தாலி கடற்படை வீரர்கள், கேரள மீனவர்களை சுட்டுக் கொன்ற விவகாரத்தில் எந்த சட்டத்தின் கீழ் விசாரிப்பது என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இதனால் இந்த வழக்கு, தேசிய புலனாய்வு அமைப்பிடமிருந்து (என்.ஐ.ஏ.) மீண்டும் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.

இத்தாலி அரசுக்கு மத்திய அரசு அளித்த வாக்குறுதிப்படி, அந்நாட்டு கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட மாட்டாது என அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

எனவே இத்தாலி வீரர்கள் மீது, கடல் போக்குவரத்து சட்டத்தை (2002) மீறி செயல்பட்டதாக என்.ஐ.ஏ.வால் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ், கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை மட்டுமே வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை கைவிட முடிவு செய்தால், என்.ஐ.ஏ. இந்த வழக்கை விசாரிக்க முடியாது. ஏனெனில், இந்த சட்டத்தின் கீழ் வரும் வழக்கை மட்டுமே விசாரிக்க என்.ஐ.ஏ.வுக்கு அதிகாரம் உள்ளது.

எனவே, இத்தாலி வீரர்கள் மீதான வழக்கை இந்தக் கடுமையான சட்டத்தின் கீழ் விசாரிப்பதை கைவிட நேர்ந்தால், இந்த வழக்கை என்.ஐ.ஏ. வேறு அமைப்பிடம் இந்த வழக்கை ஒப்படைக்கும்.

இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் குற்ற தண்டனைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரிக்கும் வகையில் சி.பி.ஐ. வசம் இந்த வழக்கை ஒப்படைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.