முகப்பு
இந்தியா

இந்திய-சீன உறவு பாதிக்காத வகையில் எல்லை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்: பிரகாஷ் காரத்

இந்திய-சீன உறவு பாதிக்காத வகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கேட்டுக்கொண்டார்.

Updated On : 2 மே, 2013 at 2:31 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:09 PM

இந்திய-சீன உறவு பாதிக்காத வகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை அறிக்கையை, மத்திய சட்டத் துறை அமைச்சர் அஸ்வனி குமார் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதன் மூலம், மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) தனது நம்பகத் தன்மையை இழந்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, சட்டத் துறை அமைச்சர் அஸ்வனி குமார் பதவி விலக வேண்டும்.

Advertisement

சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியுள்ளதாக தற்போது பிரச்னை எழுந்துள்ளது. ஊடகங்கள் வர்ணிப்பது போல, இது மிகப் பெரிய சிக்கலும் இல்லை. இந்த பிரச்னை நீண்டகாலமாக இருந்து வருகிறது. வெளியுறவுத் துறை அமைச்சர் சீனா செல்லும்போது, இந்த பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம். ராணுவ அதிகாரிகள் நிலையில் அல்லாமல் உயர் நிலையில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினால், இந்த பிரச்னைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும் என்றார் பிரகாஷ் காரத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.