காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் நிலநடுக்கம்: 2 பேர் சாவு
ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் புதன்கிழமை ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்; 69 பேர் காயமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் புதன்கிழமை ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்; 69 பேர் காயமடைந்தனர்.
காஷ்மீரின் பதேர்வா பகுதியில் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம்கொண்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.8 அலகுகளாகப் பதிவானது. இரட்டை நகரங்களான கிஷ்த்வார் மற்றும் தோடாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கிருந்த பள்ளிகள், மருத்துவமனைகள், வீடுகள், வணிக வளாகங்கள் கடுமையாக அதிர்ந்தன. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 32 பள்ளி மாணவர்கள் உள்பட 69 பேர் காயமடைந்தனர். பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
தில்லி மற்றும் அதையொட்டியுள்ள நொய்டா, குர்கான், காஜியாபாத், ஃபரீதாபாத் பகுதிகள், இமாசல பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் சுமார் 30 விநாடிகள் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டடங்கள் லேசாக அதிர்ந்தன.
Advertisement
வட இந்தியாவில் கடந்த மாதம் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கத்தால் வட மாநில மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்திய எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டதைப் போலவே பாகிஸ்தானிலும் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 5.8 அலகுகளாகப் பதிவானது.