முகப்பு
இந்தியா

தில்லியில் யாசின் மாலிக் ஆர்ப்பாட்டம் நடத்தத் தடை

தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 2 மே 2013, 3:58 am IST
பகிர்:

தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தூக்கிலிடப்பட்ட பயங்கரவாதி அப்சல் குருவின் உடலை அளிக்கக் கோரி தில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அவர் அறிவித்திருந்தார். இத்தகைய போராட்டத்தில் ஈடுபடுவதற்கு யாசின் மாலிக்கை அனுமதிக்க வேண்டாம் என்பதற்கான சுற்றறிக்கையை தில்லி போலீஸôருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளிக்கும் என தெரிகிறது. இந்த முடிவு வியாழக்கிழமை முதல் (மே 2) அமலுக்கு வருகிறது.

தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு யாசின் மாலிக்குக்கு அனுமதி அளித்தால், தலைநகரில் சட்டம், ஒழுங்கு நிலை பாதிக்கப்படும் என பாதுகாப்புப் படையினர், உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அளித்ததாகத் தெரிகிறது.

Advertisement

Advertisement

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எஃப்) அமைப்பின் தலைவரான மாலிக் சமீபத்தில் பாகிஸ்தான் சென்று அங்கு நிகழ்ந்த ஓர் ஆர்ப்பாட்டத்தில் அப்சல் குருவின் உடலை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இக்கூட்ட மேடையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.