முகப்பு
இந்தியா

சித்தராமையாவுக்கு பிரதமர் வாழ்த்து

கர்நாடகத்தின் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள சித்தராமையாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து கூறியுள்ளார்.

Updated On : 12 மே, 2013 at 1:21 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:10 PM

கர்நாடகத்தின் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள சித்தராமையாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள சித்தராமையாவுடன் தொலைபேசியில் பிரதமர் மன்மோகன் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பில் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கேயை விட கூடுதல் ஆதரவு பெற்று சித்தராமையா கர்நாடக மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.