முகப்பு
இந்தியா

முன்னாள் வீரர் பாபுராவ் யாதவ் கைது

ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரத்தில் முன்னாள் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வீரர் பாபுராவ் யாதவை தில்லி போலீஸார்

Updated On : 22 மே, 2013 at 1:25 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:11 PM

ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரத்தில் முன்னாள் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வீரர் பாபுராவ் யாதவை தில்லி போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

"கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள சுனில் பாட்டியாவை அஜீத் சாண்டிலாவுக்கு பாபுராவ் யாதவ் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்திய லீக் கிரிக்கெட் போட்டியில் 2007-ஆம் ஆண்டில் விளையாடிய போது சுனில் பாட்டியாவுடன் பாபுராவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இக்குழுவினர் சாண்டிலாவை சூதாட்டத்தில் ஈடுபடுத்தியதாக தெரியவந்துள்ளது' என்று போலீஸார் கூறினர்.  மகராஷ்டிர மாநிலம், சதர்பூரில் பிறந்தவரான பாபுராவ், 2001-02 ஆண்டில் அந்த மாநிலத்தின் விதர்பா மாவட்ட அணிக்காக 18 வயதில் கிரிக்கெட் விளையாடினார். அதைத் தொடர்ந்து விளையாட்டுத் துறை ஒதுக்கீட்டில் ரயில்வே துறை ஆபரேட்டராக பணியில் சேர்ந்தார்.

பணியிடை நீக்கம்: தற்போது பாபுராவ் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்தவுடன், அவரை பணியில் இருந்து தாற்காலிகமாக நீக்கி ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.