முகப்பு
இந்தியா

ராஜீவ் காந்திக்கு வீர் பூமியில் தலைவர்கள் அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 22-ஆவது நினைவு தினத்தையொட்டி தில்லி ராஜ்காட் அருகே உள்ள ராஜீவ் காந்தி நினைவிடமான "வீர் பூமி'யில்

Updated On : 22 மே 2013, 2:34 am IST
பகிர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 22-ஆவது நினைவு தினத்தையொட்டி தில்லி ராஜ்காட் அருகே உள்ள ராஜீவ் காந்தி நினைவிடமான "வீர் பூமி'யில் செவ்வாய்க்கிழமையன்று தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

காலை 7 மணியளவில் குடியரசுத் தலைவர்  பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரும், ராஜீவ் காந்தியின் மனைவியுமான சோனியா காந்தி, ராஜீவ் காந்தியின் மகனும் காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல்காந்தி, மகள் பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி  செலுத்தினர்.

தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி, நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும்  நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கமல் நாத் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

Advertisement

1991 மே 21-ஆம் தேதி சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்துக்காக சென்ற ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். அவர் உயிரிழந்த நாளை பயங்கரவாத எதிர்ப்பு தினமாக மத்திய அரசு அனுசரித்து வருகிறது. ராஜீவின் நினைவாக தில்லி ராஜ்காட் அருகே "வீர் பூமி' என்ற பெயரில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.