முகப்பு
இந்தியா

எரிபொருள் மானியச் செலவைக் குறைக்கவே நேரடி மானிய உதவித் திட்டம்

மத்திய அரசின் நேரடி மானிய உதவி திட்டத்தின் மூலம் எரிபொருள்களுக்கான மானியச் செலவு வெகுவாகக் குறையும் என மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் பனபாக லட்சுமி தெரிவித்துள்ளார்.

Updated On : 1 ஜூன் 2013, 11:14 pm IST
பகிர்:

மத்திய அரசின் நேரடி மானிய உதவி திட்டத்தின் மூலம் எரிபொருள்களுக்கான மானியச் செலவு வெகுவாகக் குறையும் என மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் பனபாக லட்சுமி தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களுக்கு நேரடி மானிய உதவி வழங்கும் திட்டத்தை ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் கிரண் குமார் ரெட்டி சனிக்கிழமை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் பனபாக லட்சுமி கூறியதாவது:

வாடிக்கையாளர் விவரங்களைத் தெரிந்து கொள்ளும் (கேஒய்சி) திட்டத்தின் மூலம், வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் வெகுவாகக் குறைந்துள்ளது. இதன் மூலம், சந்தை விலையில் விற்கப்படும் வர்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு விற்பனை 16 சதவீதம் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

இதனால், ஆண்டுக்கு ரூ.1.61 லட்சம் கோடியாக உள்ள மத்திய அரசின் எரிபொருள் மானியச் செலவு ரூ.97 ஆயிரம் கோடியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது, அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நேரடி மானிய திட்டத்தின் மூலம் மானியச் செலவு மேலும் குறையும் என்றார்.

ஆந்திரத்தில் முதல்கட்டமாக ஹைதராபாத், ரங்கா ரெட்டி, கிழக்கு கோதாவரி, சித்தூர் மற்றும் அனந்தபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 48.82 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்பெறுவர். இவர்களில் 17.7 சதவீதத்தினர் மட்டுமே ஆதார் அடையாள எண்ணுடன் இணைப்பு பெற்றுள்ளனர்.

இதுகுறித்து மாநில முதல்வர் கிரண் குமார் ரெட்டி கூறுகையில், ""நேரடி மானிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள 5 மாவட்டங்களில் 57 சதவீதத்தினர் மட்டுமே ஆதார் அடையாள எண் பெற்றுள்ளனர். 83 சதவீதத்தினர் மட்டுமே வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். உண்மையான, தகுதியான பயனாளிகளுக்கு மானியம் நேரடியாகச் சென்றடைய இந்தத் திட்டம் உதவும். மாநிலத்தில் மொத்தம் உள்ள 8.4 கோடி பேரில் 7.7 கோடி பேர் மட்டுமே இதுவரை ஆதார் அடையாள எண் பெற்றுள்ளனர். மற்ற அனைவருக்கும் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments