முகப்பு
இந்தியா

நக்சல் தாக்குதல்: சாவு எண்ணிக்கை 28ஆக உயர்வு

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த பாதுகாப்புப் படை அதிகாரி சியாராம் சிங் ராய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தார்.

Updated On : 2 ஜூன், 2013 at 12:16 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த பாதுகாப்புப் படை அதிகாரி சியாராம் சிங் ராய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தார்.

இத்துடன், இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28ஆக உயர்ந்தது.

காங்கிரஸ் தலைவர்கள் மீது கடந்த சனிக்கிழமை மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் மகேந்திர கர்மா உள்ளிட்ட 27 பேர் கொல்லப்பட்டனர். 37 பேர் காயமடைந்தனர்.

Advertisement

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சியாராம் சிங் உயிரிழந்து விட்டதாக மருத்துவர் சந்தீப் தேவ் தெரிவித்தார். படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 10 பேர் குணமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த சியாராம் சிங், தாக்குதலில் கொல்லப்பட்ட மகேந்திர கர்மாவின் பாதுகாப்புப் படை அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.