முகப்பு
இந்தியா

எஸ்.எம்.எஸ் மூலம் ரயில் டிக்கெட்: ஜூலை முதல் அறிமுகம்

வரும் ஜூலை மாதம் முதல் எஸ்.எம்.எஸ் மூலம் ரயில் டிக்கெட்டை பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.

Updated On : 12 ஜூன் 2013, 2:06 am IST
பகிர்:

வரும் ஜூலை மாதம் முதல் எஸ்.எம்.எஸ் மூலம் ரயில் டிக்கெட்டை பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்தியாவில் செல்போன்களுக்கு இருக்கும் சந்தை வாய்ப்பை கருத்தில்கொண்டு இந்திய

ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் எஸ்.எம்.எஸ். மூலம் டிக்கெட் பதிவு செய்யும் வசதியை தொடங்குகிறது.

Advertisement

Advertisement

இதற்காக சிறப்பு எண் ஒன்றும் பெறப்படும். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசடைவதும் தடுக்கப்படும். இத்திட்டத்தில் அச்சடிக்கும் பணி இல்லை. செல்போனை பயன்படுத்துவோர் எங்கிருந்தாலும், எஸ்.எம்.எஸ். அனுப்பி ரயில்வே டிக்கெட்டை பதிவு செய்யலாம்.

இத்திட்டத்தின் கீழ் ஒருவர் தனது செல்போன் எண், வங்கி சேமிப்பு கணக்கு எண்ணை ஐஆர்சிடிசி பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து வங்கி சார்பில் சிறப்பு எண், சங்கேத எண் வழங்கப்படும்.

எஸ்.எம்.எஸ். மூலம் டிக்கெட்டை பதிவு செய்வது எளிதானது. ரயில் எண், சேரும் இடம், பயண தேதி, வகுப்பு, பயணிகள் வயது, பெயர், இனம் தொடர்பான விவரங்களை அனுப்பவேண்டும்.

வங்கி மூலம் பணப்பரிமாற்றம் செய்வதற்கான குறியீட்டு எண்ணை பயணி பெறுவார்.

வங்கியில் இருந்து பணத்தை பெற்றவுடன் ரயில் டிக்கெட் பதிவு செய்யப்பட்டு விடும்.

அனைத்து செல்போன் உபயோகிப்பாளர்களும் ரூ.3 செலுத்தி எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்.

இதற்காக ஒரு எஸ்.எம்.எஸ்ஸூக்கு ரூ.3 வசூலிக்கப்படும் என ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.