முகப்பு
இந்தியா

விருது பெறும் காவலர்களின் சிறப்பு ஊக்கத் தொகை இரட்டிப்பு

வீரதீரச் செயல்களுக்கான விருது பெறும் காவலர்களின் சிறப்பு ஊக்கத் தொகை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

Updated On : 12 ஜூன், 2013 at 1:31 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM

வீரதீரச் செயல்களுக்கான விருது பெறும் காவலர்களின் சிறப்பு ஊக்கத் தொகை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: வீரச்செயல்களுக்கான குடியரசுத் தலைவர் விருது பெறும் காவலர்கள், துணை ராணுவப் படையினருக்கான சிறப்பு ஊக்கத் தொகையை மத்திய அரசு அதிகரித்துள்ளது. குடியரசுத் தலைவர் விருது பெறுவோறுக்கு மாத ஊக்கத் தொகை ரூ.1500-ல் இருந்து ரூ.3,000-ஆகவும், காவலர்கள் விருது பெறுவோருக்கு ரூ.900-ல் இருந்து ரூ.2000-ம் ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார் ஷிண்டே.

உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான பணியின்போதும், நக்சல்கள், பயங்கரவாதிகளுடன் சண்டையிடும் போதும், வீரதீர செயல் புரிவோர் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

Advertisement

நக்சல்களை ஒடுக்க ரூ.2079 கோடி ஒதுக்கீடு:நக்சல்களை ஒடுக்குவதற்காக சிஆர்பிஎப் மற்றும் நக்சல் ஆதிக்கம் மிகுந்த 9 மாநிலங்களுக்கு ரூ.2079 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இத்தொகையில் ரூ.1981 கோடி சிஆர்பிஎப் படையினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிதியைக் கொண்டு பாதுகாப்பு படையினரின் திறன் மேம்படுத்தப்படும்.

மீதமுள்ள ரூ.98.85 கோடி முன்தொகையாக 9 மாநில அரசுகளுக்கு வழங்கப்படுகிறது என்றார் ஷிண்டே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.