முகப்பு
இந்தியா

தாணே கட்டடம் இடிந்து 10 பேர் சாவு

தாணேவில் 3 மாடிக் கட்டடம் வெள்ளிக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.

Updated On : 22 ஜூன் 2013, 1:01 am IST
பகிர்:

தாணேவில் 3 மாடிக் கட்டடம் வெள்ளிக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் மும்ப்ராவில் உள்ள பஜார்பேட்டையில் நிகழ்ந்தது. வீடுகளில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது இவ்விபத்து நடந்ததால் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மீட்புப் பணியில் மீட்புக் குழுவினர், தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் இருந்து படுகாயத்துடன் மீட்கப்பட்ட பலர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

இடிந்த கட்டடமான "சகுந்தலா' 35 ஆண்டுகள் பழமையானது என்று போலீஸôர் தெரிவித்தனர்.

இதேபோல, கடந்த ஏப்ரல் மாதத்தில் மும்ப்ராவுக்கு அருகில் இருந்த கட்டடம் ஒன்று இடிந்ததில் 74 பேர் உயிரிழந்தனர்; மும்பையில் கடந்த 10-ம் தேதி 4 மாடிக் கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.