முகப்பு
இந்தியா

நிலக்கரி ஊழல்: காங்கிரஸ் எம்.பி. வீட்டில் சிபிஐ சோதனை

நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.யான நவீன் ஜிண்டாலின் வீட்டில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தப்பட்டது.

Updated On : 22 ஜூன் 2013, 1:51 am IST
பகிர்:

நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.யான நவீன் ஜிண்டாலின் வீட்டில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தப்பட்டது.

2008-ஆம் ஆண்டில் தவறான தகவல்கள் அளித்த ஜிண்டாலின் நிறுவனங்களுக்கு ஜார்க்கண்டில் இரண்டு நிலக்கரி சுரங்கங்களுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டன. அப்போது நிலக்கரித் துறை இணை அமைச்சராக இருந்தவர் தாசரி நாராயண ராவ். அதற்கு கைம்மாறாக தாசரி நாராயண ராவுக்கு சொந்தமான செüபாக்யா மீடியா என்ற நிறுவனத்தின் பங்குகளை ஜிண்டாலின் மற்றொரு நிறுவனம் மிகப் பெரிய தொகை அளித்து வாங்கியது என்று சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளது.

இந்த வழக்கில் நவீன் ஜிண்டால், தாசரி நாராயண ராவ் ஆகிய இருவர் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

மேலும், ஜிண்டாலின் நான்கு நிறுவனங்கள், தாசரியின் செüபாக்யா மீடியா ஆகியவையும் நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த வழக்கு தொடர்பாக இம்மாதம் 11-ஆம் தேதி புது தில்லியில் உள்ள ஜிண்டாலின் வீட்டை சிபிஐ சோதனையிட்டது. அப்போது ஜிண்டாலும் அவரது குடும்பத்தினரும் வெளிநாடு சென்றிருந்தனர்.

அந்த வீட்டில் பல அலமாரிகள், பீரோக்கள் பூட்டப்பட்டிருந்ததால் சிபிஐ அவற்றை சோதனையிட முடியவில்லை. அதனால் அவை அனைத்துக்கும் சிபிஐ சீல் வைத்துவிட்டுச் சென்றது.

ஜிண்டால் விரைவில் நாடு திரும்பி, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமென்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அவரும் அவரது குடும்பத்தினரும் இந்தியா திரும்பியுள்ளனர். இதை தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை சிபிஐ அதிகாரிகள் நவீன் ஜிண்டாலின் வீட்டுக்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர்.

அவரது முன்னிலையில் அனைத்து அலமாரிகளும் பீரோக்களும் திறக்கப்பட்டு சோதனையிடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.