முகப்பு
இந்தியா

மக்களவைத் தேர்தலில் சமாஜவாதிக்கு வெற்றி

உத்தரப்பிரதேசத்தில் தனது அரசின் செயல்பாடு காரணமாக அடுத்த மக்களவைத் தேர்தலில் சமாஜவாதிக் கட்சி சிறப்பான வெற்றியைப் பெறும் என்று மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Updated On : 21 ஜூலை 2013, 10:41 pm IST
பகிர்:

உத்தரப்பிரதேசத்தில் தனது அரசின் செயல்பாடு காரணமாக அடுத்த மக்களவைத் தேர்தலில் சமாஜவாதிக் கட்சி சிறப்பான வெற்றியைப் பெறும் என்று மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஹைதராபாதில் அகில இந்திய யாதவ மகாசபையின் தேசிய செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அகிலேஷ் யாதவ் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

சமாஜவாதிக் கட்சி, கொள்கை அடிப்படையிலான கட்சியாகும். கட்சிக்கு வலுவான கட்டமைப்பு உள்ளது. ஆட்சிக்கு வந்த பிறகு கட்சி மக்களுக்காக நல்ல காரியங்களைச் செய்துள்ளது. அரசின் செயல்பாடுகள் காரணமாக அடுத்த மக்களவைத் தேர்தலில் எங்கள் கட்சி நல்ல வெற்றியைப் பெறும். எந்தக் கட்சிக்குமே ஆட்சி அமைப்பதற்கு கணிசமான இடங்களில் வெற்றி பெறுவது அவசியம். எதிர்காலத் தேர்தல்களில் யார் அதிக இடங்களைப் பெறுகிறார்களோ அவர்கள் ஆட்சியைப் பிடிக்க முடியும்.

Advertisement

Advertisement

உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க எனது அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில் சில சம்பவங்கள் நடந்தன. எனினும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. லக்னௌ நகரிலன் வேகமான வளர்ச்சிக்காக மருத்துவமனைகளை அமைப்பது, சாலைகள் அமைப்பது ஆகிய நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. நகரில் மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டுவரவும் அரசு முயற்சிக்கும் என்றார் அகிலேஷ் யாதவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.