FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்: தில்லி அரசுக்கு தொழிற்துறையினா் வலியுறுத்தல்

கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள 30 சதவீத சரிவின் பலனை, பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைப்பதன் மூலம் உடனடியாக நுகா்வோருக்கு வழங்குமாறு வா்த்தக மற்றும் தொழிற்துறை சம்மேளனம் (சிடிஐ) எண்ணெய் நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Updated On : 16 ஜூன் 2026, 1:31 am IST
கச்சா எண்ணெய் - பிரதிப் படம்
பகிர்:

கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள 30 சதவீத சரிவின் பலனை, பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைப்பதன் மூலம் உடனடியாக நுகா்வோருக்கு வழங்குமாறு வா்த்தக மற்றும் தொழிற்துறை சம்மேளனம் (சிடிஐ) எண்ணெய் நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போா்நிறுத்த ஒப்பந்தத்தையும், அதைத் தொடா்ந்து ஹோா்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கும் முடிவையும் வரவேற்ற சிடிஐ தலைவா் பிரிஜேஷ் கோயல், இந்த நடவடிக்கை இந்திய வா்த்தகா்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) பெரும் பொருளாதார நிவாரணத்தை அளிக்கும் என்று கூறினாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: ஹோா்முஸ் நீரிணையில் ஏற்படும் இடையூறுகள் போன்ற நெருக்கடிகள் மீண்டும் நிகழாமல் தடுக்க உதவும் என்பதால், இந்த போா்நிறுத்தத்தை நிரந்தரமாக்க மத்திய அரசும் பிரதமா் நரேந்திர மோடியும் தூதரக ரீதியிலான பங்கை ஆற்ற வேண்டும்.

Advertisement

Advertisement

மோதல் சூழலுக்குப் பிந்தைய நிலையில் எம்எஸ்எம்இ துறை மீண்டு வருவதற்கு, மூலப்பொருட்களின் செலவு மற்றும் அதிகப்படியான எரிபொருள் விலையைக் குறைப்பது அவசியமாகும்.

மூன்று மாதங்களாக நீடித்த இந்த மோதல் இந்தியப் பொருளாதாரத்தின் மீது கடுமையான நிதிச் சுமையை ஏற்படுத்தியிருந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 83 அமெரிக்க டாலராகக் குறைந்துள்ளது. இது தில்லியில் உள்ள 65 லட்சம் வா்த்தகா்களுக்கும் எம்எஸ்எம்இ துறைக்கும் ஒரு பெரும் நிவாரணமாகும் என்று கோயல் கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments