இந்தியா

நிலம் வாங்கியதாக புகார்: பாஜக விளக்கம்

DIN

ரூபாய் நோட்டுகள் வாபஸ் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு பாஜகவினர் அதிக அளவு நிலங்களை வாங்கிக் குவித்ததாக மேற்கு வங்க முதல்வர் மம்தா கூறிய குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது.
இதுகுறித்து பாஜக தேசியச் செயலர் சித்தார்த்நாத் சிங், கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
ரூபாய் நோட்டுகள் வாபஸ் என்ற அறிவிப்பால் பொதுமக்கள் கஷ்டங்களை எதிர்கொண்டுவருவதாக மம்தா ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். இந்த நடவடிக்கையை ஒட்டுமொத்த நாடும் ஆதரிக்கும்போது, அவர் எதிர்ப்பது ஏன்?
ரூபாய் நோட்டுகள் வாபஸ் என்ற அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு அதிக நிலங்களை பாஜகவினர் வாங்கியதாக அவர் குற்றம்சாட்டி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே நாடு முழுவதும் கட்சி அலுவலகங்களைக் கட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அலுவலகங்கள் கட்ட வேண்டுமானால் நிலம் தேவை. வாங்கிய நிலம் அனைத்துக்கும் உரிய ஆவணங்கள் எங்களிடம் உள்ளன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

SCROLL FOR NEXT