இந்தியா

ரூ.2,500க்கு விமானப் பயணம்: 'உடான்' திட்டம் அறிமுகம்

DIN

உள்நாட்டில் ஒரு மணி நேரத்துக்குள்பட்ட விமானப் பயணத்துக்கு அதிகபட்சம் ரூ.2,500 கட்டணம் நிர்ணயிக்கும் "உடான்' திட்டம் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்குவிப்பதுடன், சாதாரண மக்களும் விமானப் பயணத்தை மேற்கொள்ள வழிவகை செய்யும் இத்திட்டம், வரும் ஜனவரியில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு, தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

"உடான்' திட்டத்தின்படி, உள்நாட்டுக்குள் சுமார் 476 கி.மீ. முதல் 500 கி.மீ. வரையிலான பயணத்துக்கு (சுமார் ஒரு மணி நேரம்) அதிகபட்சமாக ரூ.2,500 நிர்ணயிக்கப்படும். இந்த கட்டணம் அவ்வப்போது மாற்றியமைக்கப்படும்.

உடான் திட்டத்தில் இணையும் விமானங்களில், பாதி இருக்கைகளுக்கு இத்திட்டத்தின்படியும், மீதி இருக்கைகளுக்கு சந்தை நிலவரப்படியும் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.

இதற்கு நிதி திரட்டுவதற்காக, லாபம் ஈட்டும் நீண்டதூர விமான வழித்தடங்களில் சிறிய அளவிலான வரி விதிக்கப்படவுள்ளது. நாட்டில் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் விமான நிலையங்களை புதுப்பிக்கவும் முடிவு செய்துள்ளோம் என்றார் கஜபதி ராஜு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT