இந்தியா

ஹரியாணா அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற கட்டணம் நிர்ணயம்

DIN

ஹரியாணா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனைத்துவிதமான சிகிச்சைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநில அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. சிகிச்சைக்கான கட்டணங்களாக ரூ.10 முதல் ரூ.500 வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில சுகாதாரத்துறை ஜூலை 7-ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி, நோயாளிகள் சேர்க்கை, ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, ரத்தத் திட்டுகள் எண்ணிக்கை பரிசோதனை, எக்ஸ்-ரே உள்ளிட்டவற்றுக்கு ரூ.10 முதல் ரூ.500 வரையில் கட்டணம் வசூலிக்கப்படும்.
முன்னதாக, இந்த அனைத்து சேவைகளும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும், வறுமைக் கோட் டுக்கு கீழ் உள்ளவர்கள், குழந்தைகள், பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சிறைக் கைதிகள், போலீஸ் காவலில் இருக்கும் குற்றவாளிகள் ஆகியோருக்கு இலவச சிகிச்சைகள் அளிக்கப்படும் என்று அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், பொது வார்டு படுக்கைக்கான ஒருநாள் கட்டணம் ரூ.5-இல் இருந்து ரூ.10-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எலும்புகள், பற்கள் தொடர்பான எக்ஸ்ரே சோதனைக்கான கட்டணம் ரூ.50-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முன்பு இலவசமாக இருந்த பல்வேறு நோய்கள் தொடர்பான பரிசோதனைகள், தற்போது கட்டணத்துக்கு உள்பட்டவையாக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிக்கை தொடர்பான தகவலை குருகிராம் தலைமை மருத்துவ அதிகாரியான பி.கே.ரஜோரா உறுதிப்படுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT