இந்தியா

பிரதமர் மோடியுடன் ஒபாமா தொலைபேசியில் பேச்சு: இருதரப்பு உறவை வலுப்படுத்தியதற்கு நன்றி தெரிவித்தார்

DIN

பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, இரு தரப்பு உறவை வலுப்படுத்தியற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
அமெரிக்க அதிபராக கடந்த 8 ஆண்டுகாலம் பதவி வகித்த ஒபாமா வரும் 20-ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடியை புதன்கிழமை அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை (வெள்ளை மாளிகை) தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பிரதமர் மோடியுடன் புதன்கிழமை நடத்திய தொலைபேசி உரையாடலின்போது, இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு உறுதியான ஆதரவு மற்றும் பங்களிப்பு அளித்தமைக்கு ஒபாமா நன்றி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு விவகாரம், ஆக்கப்பூர்வ அணுசக்தி விவகாரம், மக்களுக்கு இடையே தொடர்பை ஏற்படுத்துதல் போன்றவற்றில் ஒத்துழைப்பை அதிகரிக்க உதவியற்கும் நன்றி தெரிவித்தார்.
இந்த உரையாடலின்போது, தில்லியில் கடந்த 2015-ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய குடியரசு தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தாம் கலந்து கொண்டதை ஒபாமா நினைவு கூர்ந்தார்.
விரைவில் கொண்டாடப்படவுள்ள இந்தியாவின் 68-ஆவது குடியரசுத் தினத்தை முன்னிட்டும் தனது வாழ்த்துகளை மோடியிடம் அவர் தெரிவித்தார் என்று அமெரிக்க அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "தொலைபேசி உரையாடலின்போது, இரு தலைவர்களும் அனைத்து நிலை உறவுகளிலும் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதற்கு திருப்தி தெரிவித்தனர்; அப்போது, எதிர்கால இலட்சியங்களில் ஒபாமா வெற்றியடைவதற்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்தார்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதும், அக்கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளராக போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடியை முதன்முதலில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒபாமாதான் வாழ்த்துத் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்காவில் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தன்னாா்வலா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி

மேட்டூா் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்!

மலைக் கிராமங்களில் மரவள்ளி அறுவடையில் விவசாயிகள் மும்முரம்

வாழப்பாடி பகுதியில் கோடை மழை

மின் விபத்துகளைத் தடுக்க ஊழியா்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி

SCROLL FOR NEXT