இந்தியா

ஆதரவு கோரி உ.பி.யில் பயணத்தை தொடங்கினார் ராம்நாத் கோவிந்த்

DIN

குடியரசுத் தலைவர் தேர்தலில் தமக்கு ஆதரவு கோரி பாஜக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பயணத்தைத் தொடங்கினார்.
அந்த மாநிலத்தைச் சேர்ந்த பாஜக, அதன் கூட்டணிக் கட்சி எம்.பி., எம்எல்ஏக்களை அவர் நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். ராம்நாத் கோவிந்த் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக லக்னெள விமான நிலையத்துக்கு வந்த அவரை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள் வரவேற்று முதல்வரின் அரசு இல்லத்துக்கு அழைத்துச் சென்
றனர்.
மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக தேசிய பொதுச் செயலாளர் பூபேந்திர யாதவ் உள்ளிட்டோர் ராம்நாத் கோவிந்துடன் வந்தனர்.
முதல்வரின் இல்லத்தில் மாநில பேரவைத் தலைவர் நாராயண் தீட்ஷித், மாநில எம்.பி., எம்எல்ஏக்கள் கூடியிருந்தனர்.
அவர்கள் மத்தியில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
முதல்முறையாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தலைவர் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கட்சி வேறுபாடுகளையும், அரசியல் கருத்து வேற்றுமைகளையும் தாண்டி அனைத்துக் கட்சியினரும் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும். எளிமையான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து வரும் அவர், நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களுக்காக சிறந்த முறையில் பணியாற்றுவார் என்றார்.
கூட்டத்தில் பேசிய நிதின் கட்கரி, "உத்தரப் பிரதேசம் பல சிறந்த பிரதமர்களை நாட்டுக்குத் தந்துள்ளது. இப்போது முதல்முறையாக சிறந்த குடியரசுத் தலைவர் உத்தரப் பிரதேச மண்ணில் இருந்து தேர்வு செய்யப்பட இருக்கிறார். இந்தியாவிலேயே அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலம் உத்தரப் பிரதேசம். இங்கிருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு ஒரு சிறந்த தலைவரை அனுப்புவதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT