இந்தியா

இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை: வழக்கு தொடுப்போம்

DIN

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாடுகளை வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்காக மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் இறைச்சிக்காக அவற்றை விற்கக் கூடாது என்றும் மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. இதுதொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்த உத்தரவானது நாடு முழுவதும் கடுமையான விமர்சனங்களுக்கு வித்திட்டது. கேரளம் உள்பட பல்வேறு மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. மத்திய அரசின் இந்த முடிவு, தனிமனித உரிமைகளைப் பறிக்கும் செயல் என்றும் விமர்சிக்கப்பட்டது.
மேலும், அதனை எதிர்த்து கேரளத்தில் மாட்டிறைச்சி திருவிழா நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜி, செய்தியாளர்களிடம் கொல்கத்தாவில் திங்கள்கிழமை கூறியதாவது: இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை விதித்திருப்பது மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கும் நடவடிக்கை. இது முழுக்க, முழுக்க ஜனநாயகத்துக்கும், அரசியல் சாசனத்துக்கும் முரணான செயல்பாடு. நாட்டின் கூட்டாட்சி கொள்கையை அழித்தொழிக்கும் முயற்சியாகவே இதைக் கருதத் தோன்றுகிறது. இந்த முடிவை மேற்கு வங்க அரசு ஏற்காது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.
இதுதொடர்பாக மாநில அரசு தலைமை வழக்குரைஞரிடம் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும். மாநிலங்களின் விவகாரங்களில் தேவையின்றி தலையிடுவதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT