இந்தியா

லோகியா நினைவு தினத்தில் ஒன்றிணைந்த அகிலேஷ் - முலாயம்!

DIN

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற சோஷலிசத் தலைவர் ராம் மனோகர் லோகியாவின் நினைவு தின நிகழ்ச்சியில் சமாஜவாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், அவரது தந்தை முலாயம் சிங்கும் இணைந்து பங்கேற்றனர். நீண்ட நாள்களுக்குப் பிறகு அவர்கள் இருவரும் பொது நிகழ்ச்சியில் ஒரு சேர பங்கேற்றது சமாஜவாதிக் கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முலாயமுக்கும், அகிலேஷுக்கும் இடையே கடந்த ஆண்டு கடும் கருத்து மோதல் உருவானது. இதையடுத்து, அகிலேஷை கட்சியை விட்டு நீக்கி முலாயம் உத்தரவிட்டார்.
அதன் பிறகு கட்சிப் பொதுக் குழுவைக் கூட்டி அதிரடியாக முலாயமின் தலைவர் பதவியைப் பறித்த அகிலேஷ், அப்பொறுப்பை தன்வசப்படுத்திக் கொண்டார். இதையடுத்து அண்மையில் நடைபெற்ற சமாஜவாதி தேசிய மாநாட்டில் மீண்டும் தலைவர் பொறுப்புக்கு அகிலேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
இதன் விளைவாக கடந்த சில மாதங்களாகவே தந்தையும், மகனும் ஒரு சேர எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்து வந்தனர். இந்நிலையில், லக்னெளவில் வியாழக்கிழமை நடைபெற்ற சோஷலிசத் தலைவர் ராம் மனோகர் லோகியாவின் நினைவு தின நிகழ்ச்சியில் அவர்கள் இருவரும் இணைந்து பங்கேற்றனர். லோகியாவின் நினைவிடத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு அகிலேஷும், முலாயமும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சமாஜவாதி தொண்டர்கள் உற்சாக முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT