இந்தியா

ரயில் பயணிகள் எம்-ஆதாரை அடையாளஅட்டையாக பயன்படுத்தலாம்: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

DIN

ரயில் பயணத்தின்போது எம்-ஆதாரை (மொபைல் ஆதார்) அடையாள அட்டையாக பயணிகள் பயன்படுத்தலாம் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 'ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட வகுப்புகளில் பயணிக்கும் பயணிகள், எம்-ஆதாரை அதற்கான கடவுச் சொல்லை அளித்து, அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் அண்மையில் எம்-ஆதார் எனப்படும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலியின் மூலம், இந்திய பிரஜைகள் தங்களது ஆதாரை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். 
அதாவது, ஆதார் அட்டை பதிவின்போது கொடுக்கப்படும் எண் இருக்கும் செல்லிடப்பேசியிலேயே அதை பதிவிறக்கம் செய்ய முடியும். இந்த ஆதாரை, ஏதேனும் இடத்தில் அடையாள ஆவணமாக காண்பிக்க வேண்டுமெனில், அந்த செயலிக்குச் சென்று, கடவுச் சொல்லை கொடுக்க வேண்டும். அதன்பிறகே, ஆதார் விவரம் வெளியே வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT