முகப்பு
இந்தியா

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் போராட்டம்

முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு அனுமதிக்காததைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று மனிதச் சிங்கிலி போராட்டம் நடத்தினர். 

Updated On : 5 ஏப்ரல் 2018, 11:58 am IST
பகிர்:

முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு அனுமதிக்காததைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று மனிதச் சிங்கிலி போராட்டம் நடத்தினர். 

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கோரும் விவகாரம், எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் விவகாரம், வங்கிகளில் நடைபெற்ற மிகப் பெரும் ஊழல், தில்லி சீலிங் விவகாரம், பெட்ரோல், டீசல் விலை உயர்வுப் பிரச்னை, சிபிஎஸ்இ வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நாடாளுமன்த்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்த மத்திய அரசு அனுமதிக்காததைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன் எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று மனிதச் சிங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல், சோனியா, திருச்சி சிவா, டி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று 20வது  நாளாக முடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments