புதுச்சேரி அரசு கொறடா தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு ஏற்பு
மத்திய அரசுக்கு எதிராக, புதுவை அரசுக் கொறடா தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
மத்திய அரசுக்கு எதிராக, புதுவை அரசுக் கொறடா தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், 6 வாரக் கெடு முடியும் நாளில் தீர்ப்பில் இடம் பெற்றிருந்த "ஸ்கீம்' (திட்டம்) என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தை அணுகியது.
இந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசு மீது, தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு வருகிற 9-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
Advertisement
Advertisement
இதேபோல, புதுவை அரசும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க முடிவு செய்தது. அதற்கான கோப்பு தயாரித்து ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அனுமதி தரவில்லை.
இதனால், புதுவை அரசுக் கொறடா அனந்தராமன் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. அதன்படி அரசு கொறடா அனந்தராமன் தில்லி சென்று மத்திய அரசுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை வழக்குத் தொடுத்தார்.
இம்மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இதனையடுத்து, புதுச்சேரி அரசின் மனுவினை தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுடன் சேர்த்து 9ம் தேதி விசாரணை நடத்தப்படும் எனக் கூறியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.