முகப்பு
இந்தியா

விருது வழங்கும் விழா மேடையில் நடனமாடி உயிர்விட்ட தொழிலதிபர்! (அதிர்ச்சி விடியோ) 

தனக்கு விருது வழங்கும் விழா மேடையில் உற்சாக மிகுதியில் நடனமாடி தொழிலதிபர் ஒருவர் உயிர் விட்ட சம்பவம் பார்த்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Updated On : 5 ஏப்ரல் 2018, 7:03 pm IST
பகிர்:

ஆக்ரா:  தனக்கு விருது வழங்கும் விழா மேடையில் உற்சாக மிகுதியில் நடனமாடி தொழிலதிபர் ஒருவர் உயிர் விட்ட சம்பவம் பார்த்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஆக்ராவில் 'டிராவல் க்ளினிக்' என்ற அமைப்பின் சார்பில் தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விருது நிகழ்ச்சியில் விஷ்ணுபாண்டே (53) என்ற தொழிலதிபருக்கு விருது அறிவிக்கப்பட்டது. இவரது பெயர் அறிவித்தவுடன், இருக்கையில் எழுந்து நடனமாடிக் கொண்டே மேடை நோக்கிச் சென்றார். அங்கும் சில நொடிகள் மேடையில் நடனமாடினார்.

Advertisement

Advertisement

பின்னர் அப்படியே மேடையிலேயே மயங்கிச் சரிந்தார். இதனைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பின் காரணமாக இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவமானது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

விடியோ:   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments