இந்தியா

மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான்கான் குற்றவாளி: ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு

அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் குற்றவாளி என்று ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

PTI


அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் குற்றவாளி என்று ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

படப்பிடிப்புக்குச் சென்ற இடத்தில் மான் வேட்டையாடியதாக சல்மான்கான் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை 20 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், மான் வேட்டையாடிய போது சல்மான் கானுடன் இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்த நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு உள்ளிட்டோரை விடுவித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

1998ம் ஆண்டு அரிய வகை மான்களை வேட்டையாடியதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் உள்ளிட்டோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வந்த ஜோத்பூர் நீதிமன்ற தலைமை நீதித்துறை நடுவர் தேவ் குமார் கத்ரி இன்று தீர்ப்பளித்தார்.

தீர்ப்பு வெளியாவதை முன்னிட்டு, குற்றம்சாட்டப்பட்ட நடிகர்களான சல்மான் கான், சைஃப் அலி கான், தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

கடந்த 1998-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் கன்கானி கிராமத்தின் அருகே 'ஹம் சாத் சாத் ஹே' என்ற பாலிவுட் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அதில் நடித்து வந்த சல்மான் கான், அக்டோபர் 1-ஆம் தேதி பின்னிரவில் 2 மான்களை சுட்டுக் கொன்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அப்போது, இதர நடிகர், நடிகைகளும் உடனிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக சல்மான்கான் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 51-இன் கீழும், இதர நடிகர், நடிகைகள் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 51, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 149 (சட்டவிரோதமாக ஒன்று கூடுதல்) ஆகியவற்றின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!

மும்பையில் புதிய மேம்பாலம்: முதல்வர் ஃபட்னவீஸ் திறந்து வைத்தார்!

நல்லகண்ணுக்கு பாரதரத்னா வழங்க வேண்டும்! பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்!

முன்அனுமதியின்றி ஊடக விவாதங்களில் பங்கேற்கக் கூடாது! - தவெக

SCROLL FOR NEXT