முகப்பு
இந்தியா

ஆட்டை மீட்பதற்காக கம்பெடுத்து புலியுடன் சண்டை போட்ட வீரப்பெண்: ரத்தம் சொட்ட ஒரு செல்ஃபி! 

தனது ஆட்டை மீட்பதற்காக கம்பெடுத்து புலியுடன் சண்டை போட்ட மஹாராஷ்டிரா பெண் ஒருவர், ரத்தம் சொட்ட எடுத்து வெளியிட்ட ஒரு செல்ஃபி இணையத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Updated On : 5 ஏப்ரல் 2018, 1:29 pm IST
பகிர்:

நாக்பூர்: தனது ஆட்டை மீட்பதற்காக கம்பெடுத்து புலியுடன் சண்டை போட்ட மஹாராஷ்டிரா பெண் ஒருவர், ரத்தம் சொட்ட எடுத்து வெளியிட்ட ஒரு செல்ஃபி இணையத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மகாராஷ்ட்ராவின் நாக்பூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ரூபாலி மேஷ்ராம்(23). சில தினங்களுக்கு முன்னர், வீட்டில் இவர் படுத்துக் கொண்டிருந்தபோது, வெளியே  அவரது ஆட்டுக்குட்டி அலறும் சத்தம் கேட்டுள்ளது.

உடனடியாக ரூபாலி வெளியே சென்று பார்த்த பொழுது , அவரது ஆட்டை புலி  ஒன்று கவ்விப் பிடித்து கொண்டு கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட அவர் அருகில் இருந்த கம்பு ஓன்றினை எடுத்து புலியைத் தாக்கத் தொடங்கினார். அதனுடன் கடுமையாகப் போராடினார்.

Advertisement

Advertisement

ஒரு கட்டத்தில் ரூபாலியை  புலி ஆவேசத்துடன் தாக்க முயற்சிக்கும் பொழுது, ரூபாலியை அவரது தாயார் வீட்டினுள்ளே இழுத்து தாழிட்டார். புலியும் அங்கிருந்து ஓடி விட்டது. ஏற்கெனவே புலி கடுமையாக தாக்கியதால், ரூபாலியின் ஆடு இறந்து விட்டது.  ரூபாலியின் தலை, கழுத்து, கால், இடுப்பு என கடுமையான காயங்களும் அவரது தாயாருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து வீட்டினுள் ரத்தம் வழியும் முகத்துடன் ரூபாலி அவரது தாயாருடன் சேர்ந்து  செல்ஃபியும் எடுத்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு, அதிர்ஷ்டவசமாக ரூபாலி  உயிர் பிழைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments