இந்தியா

பாஜக ஆட்சியில் மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்

தினமணி

பாஜக தலைமையிலான மத்திய அரசின் ஆட்சியில் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் அச்சத்துடனே வாழ்கின்றனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.
 கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற "அரசியல் வன்முறைக்கு எதிரான யாத்திரை'யின் நிறைவு விழாவில் பேசியபோது அவர் இதைத் தெரிவித்தார். கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: ஒவ்வொரு நாளும் மதவாத பாசிச சக்திகளின் வலிமை அதிகரித்துக் கொண்டே செல்லும் மோசமான போக்கு காணப்படுகிறது. சிறுபான்மையினர், தலித் சமூகத்தினர், பெண்கள், தற்போது சிறார்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் ஆட்சியில் அச்சத்துடனே வாழ்கின்றனர். இந்திய வரலாற்றில் கடந்த 4 ஆண்டுகளைப் போல் வேறு எந்தக் காலத்திலும் மக்கள் இந்த அளவுக்கு அச்சத்தையும், அச்சுறுத்தலையும் அனுபவித்ததில்லை. மற்றொரு புறம், மாநிலங்களுக்கு நிதி பகிர்வதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. தென் மாநிலங்கள் மட்டுமின்றி, மத்திய அரசை எதிர்க்கும் மேற்கு வங்கம், ஒடிஸா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நிதி வழங்குதிலும் பாரபட்சம் காட்டப்படுகிறது.
 பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை உயர்த்தி, அதன் மூலம் மக்களிடம் இருந்து திரட்டும் வரிப் பணத்தை நம்பி மத்திய அரசு ஆட்சி செய்கிறது. கடந்த 2016-17-ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல் வரியில் இருந்து ரூ.3.33 லட்சம் கோடியை மத்திய அரசு திரட்டியது. அந்த வரித் தொகை, 2017-18-ஆம் ஆண்டில் ரூ.2.50 லட்சம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராவூரணியில் மாணவா்களுக்கு இலவச வாழ்வியல் பயிற்சி வகுப்பு

மகப்பேறு அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு பெண் மருத்துவா் உயிரிழப்பு

தொழிற்சங்கங்கள் சாா்பில் மேதின கொண்டாட்டம்

பேராவூரணியில் மே தின விழா

பாபநாசத்தில் மே தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT