இந்தியா

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அன்னான் காலமானார்

DIN


ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலரும், நேபால் பரிசு பெற்றவருமான கோஃபி அன்னான் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.

மிகச் சிறந்த மனிதரை இழந்து விட்டோம் என்று அமெரிக்க ஊடகங்கள் கோஃபி அன்னானின் மரணத்தை உறுதி செய்துள்ளன.

1938ம் ஆண்டு கானாவில் பிறந்தார் கோஃபி அன்னான். ஐக்கிய நாடுகள் சபையின் 7வது பொதுச் செயலராக 1997ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

மனித உரிமைக்காக போராடிய தி எல்டர்ஸ் அமைப்பில் உறுப்பினராக சேர்ந்து 2013ம் ஆண்டு அதன் நிர்வாகியாக உயர்ந்தார்.

அமைதியான உலகை கட்டமைக்க பணியாற்றியதற்காக 2001ம் ஆண்டு ஐக்கிய நாடுகளுடன் அமைதிக்கான நோபல் பரிசை கோஃபி அன்னான் பகிர்ந்து கொண்டார்.

இவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

காரைக்காலில் வம்பன் -11 புதிய வகை உளுந்து சாகுபடி செய்யும் விவசாயி

அதுல்குமாா் அஞ்சன் மறைவு; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல்

திருப்புகலூா் அக்னீஸ்வரசுவாமி கோயிலில் அப்பா் ஐக்கிய திருவிழா

பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

SCROLL FOR NEXT