இந்தியா

விஷமான பிரசாதம்: உயிர் பலி 15 ஆனது; 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்

DIN

கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் அருகே நடைபெற்ற கோயில் விழாவில் வழங்கப்பட்ட நச்சுகலந்த பிரசாதத்தை சாப்பிட்டதால் பலியானோரின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.

உடல் நலம் பாதிக்கப்பட்டு 15 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்னமும் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 3 பேரின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சாம்ராஜ்நகர் அருகே சுலவாடி கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்ட நச்சு கலந்த பிரசாதத்தை சாப்பிட்ட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

அவர்களில் மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரில் மேலும் சிலரின் உடல் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளது. அவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள், விஷம் கலந்த பிரசாதத்தை சாப்பிட்டதாலேயே மரணம் அடைந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோயில் நிர்வாகிகள் இடையே ஏற்பட்டுள்ள மோதலினால், பிரசாதத்தில் நச்சு கலக்கப்பட்டு இருக்கலாம் என கிராம மக்கள் சந்தேகம் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT