முகப்பு
இந்தியா

இந்தியாவுக்குக் கடத்தப்பட்ட நேபாளப் பெண்கள் மீட்பு

நேபாளத்திலிருந்து, வேலை வாங்கித் தருவதாகக் கூறி தரகர்களால் இந்தியாவுக்குக் கடத்தப்பட்ட 13 பெண்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் மீட்கப்பட்டுள்ளனர்.

Updated On : 26 டிசம்பர் 2018, 1:02 am IST
பகிர்:


நேபாளத்திலிருந்து, வேலை வாங்கித் தருவதாகக் கூறி தரகர்களால் இந்தியாவுக்குக் கடத்தப்பட்ட 13 பெண்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் நேபாளத்துக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, மைதி இந்தியா தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ண பாண்டே கூறுகையில், 17 முதல் 40 வயது வரையிலான நேபாளப் பெண்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலிருந்து மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரையும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தரகர்கள் இந்தியாவுக்குக் கடத்தியுள்ளனர். பெங்களூரில் 8 பெண்களும், ஆமதாபாதில் 5 பெண்களும் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் காத்மண்டுக்கு செவ்வாய்க்கிழமை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் நேபாள நாட்டின் புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர் என்றார்.
வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற உறுதியை நம்பி, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான நேபாளப் பெண்கள் இந்தியாவுக்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments