முகப்பு
இந்தியா

ரூ.100, ரூ.50, ரூ.10ஐத் தொடர்ந்து அடுத்த புதிய நோட்டு இதுவே!

ரூ.100, ரூ.50, ரூ.10ஐத் தொடர்ந்து அடுத்த புதிய நோட்டு இதுவே!புது தில்லி: ரூ.100, ரூ.50, ரூ.10ஐத் தொடர்ந்து புதிய 20 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட  உள்ளது.

Updated On : 25 டிசம்பர் 2018, 3:40 pm IST
பகிர்:


புது தில்லி: ரூ.100, ரூ.50, ரூ.10ஐத் தொடர்ந்து புதிய 20 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட  உள்ளது.

தற்போதிருக்கும் 20 ரூபாய் நோட்டில் இல்லாத புதிய அம்சங்களுடன் இந்த நோட்டு அமையும்.

ஏற்கனவே, புழக்கத்தில் இருக்கும் பழைய நோட்டுகளுடன், தற்போது புதிதாக ரூ.10, ரூ.50, ரூ.100, ரூ.500 ஆகிய நோட்டுகளை ஆர்பிஐ வெளியிட்டது. அடுத்தபடியாக இதுவரை பயன்பாட்டில் இல்லாத ரூ.200 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளையும் வெளியிட்டது.

Advertisement

Advertisement

ஏற்கனவே புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளின் அளவிலும் சரி, நிறம் மற்றும் வடிவமைப்பிலும் சரி புதிய நோட்டுகள் வேறுபட்டுக் காணப்பட்டன.

2016ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான தகவலின் அடிப்படையில் 492 கோடி 20 ரூபாய் தாள்கள் புழக்கத்தில் உள்ளது. இது 2018ல் இரட்டிப்பாக்கப்பட்டு 1000 கோடி 20 ரூபாய் தாள்கள் புழக்கத்தில் இருந்தன.

தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளில் 9.8 சதவிகிதம் 20 ரூபாய் நோட்டு என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments