இந்தியா

வங்கதேசத்தில் ஹிந்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

DIN

வங்கதேசம் அளித்துள்ள அதிகாரப்பூர்வத் தகவல்களின்படி, அந்நாட்டில் வாழும் ஹிந்து மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகத் தெரியவருகிறது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
அந்நாட்டில் ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கருதப்படும் நிலையில், மாநிலங்களவையில் இதுதொடர்பான கேள்விக்கு சுஷ்மா ஸ்வராஜ் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் வாழும் சிறுபான்மையினரின் (ஹிந்துக்கள்) துயரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளுடன் மத்திய அரசு இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது துயரங்களை களைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த நாடுகளில் வசிக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் மற்றும் கொடுமைகளை தடுப்பதற்கு உதவியாக, மேலவையில் நிலுவையில் இருக்கும் குடியுரிமைச் சட்ட திருத்த மசோதா நிறைவேறுவதற்கு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
வங்கதேச அரசு அளித்துள்ள மக்கள் தொகை புள்ளி விவரத்தின்படி, அந்த நாட்டில் கடந்த 2011-ஆம் ஆண்டு 8.4 சதவீதமாக இருந்த ஹிந்துக்களின் எண்ணிக்கை, 2017-ஆம் ஆண்டில் 10.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சிறுபான்மையினருக்கு எதிராக, கொலை, கடத்தல், மதமாற்றம், வழிபாட்டுத் தலங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நிகழ்கின்றன. அந்தச் சம்பவங்கள் தொடர்பாக இந்திய அரசின் கவலை குறித்து, சம்பந்தப்பட்ட அரசுகளிடம் இருதரப்புப் பேச்சுவார்த்தை மூலமாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களை தீவிரமானதாகக் கொண்டு, அதற்கெதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதாக வங்கதேச அரசு கூறியுள்ளது. ஆப்கானிஸ்தான் அரசும் சிறுபான்மையினரை பாதுகாக்க உறுதியளித்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து சிறுபான்மையினர் புலம்பெயறும் விவகாரம் மத்திய உள்துறையுடன் தொடர்புடையது என்றாலும், வெளியுறவு அமைச்சகமும் அதில் பொறுப்பேற்று அவர்கள் நலனுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்று அந்த பதிலில் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT