முகப்பு
இந்தியா

மக்களவையில் ராகுலுக்கு எதிராக பாஜக எம்.பி.க்கள் உரிமை மீறல் நோட்டீஸ்

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக மக்களவையில் பாஜக எம்.பி.க்கள் உரிமை மீறல் தீர்மான நோட்டீஸ் அளித்தனர். இதனை, ஆய்வு செய்த பின்பு,

Updated On : 24 ஜூலை 2018, 1:11 am IST
பகிர்:

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக மக்களவையில் பாஜக எம்.பி.க்கள் உரிமை மீறல் தீர்மான நோட்டீஸ் அளித்தனர். இதனை, ஆய்வு செய்த பின்பு, தீர்மானம் குறித்து பதிலளிப்பதாக மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் மக்களவையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது கடந்த வெள்ளிக்கிழமை விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய ராகுல் காந்தி ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பிரதமருக்கு நெருக்கமான தொழிலதிபர் லாபமடைந்துள்ளார் என்று குற்றம் சாட்டியிருந்தார். ராகுலின் கருத்தை எதிர்த்த பாஜக உறுப்பினர்கள் இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன் வைத்து நாடாளுமன்றத்தை தவறான பாதையில் வழிநடத்தியதாக தெரிவித்து, பாஜக எம்.பி.க்கள் அனுராக் தாகூர், துஷ்யந்த் சிங், நிசிகாந்த் துபே மற்றும் பிரஹலாத் ஜோஷி ஆகிய 4 பேரும், ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனிடம் அளித்தனர். மக்களவையில் கேள்வி நேரம் முடிந்தவுடன், பாஜக கட்சியின் சார்பாக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வருவதாக துபே தெரிவித்தார். இந்த தீர்மான நோட்டீஸுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் பேசுகையில், இது பற்றி ஆய்வு செய்து விட்டு பிறகு உங்களுக்கு தெரிவிக்கிறேன்' என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments