இந்தியா

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க,வினர் போராட்டம்

DIN

கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க,வினர் போராட்டம் நடத்தினர். 

கர்நாடக முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) மாநிலத் தலைவர் ஹெச்.டி. குமாரசாமி இன்று மாலை பதவியேற்கிறார். அவருடன் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வரும் துணை முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 

இந்நிலையில் கர்நாடகாவில் மக்களின் விருப்பத்துக்கு எதிராக காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க,வினர் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதியில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை

திருநாவுக்கரசா் குருபூஜை

வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் கைது

சித்திரைத் தோ்த் திருவிழா: ஊஞ்சல் உற்சவம்

SCROLL FOR NEXT