இந்தியா

ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதை பிரதமரே ஒப்புக் கொண்டு விட்டார்: ராகுல்

DIN


ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதை உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியே ஒப்புக் கொண்டு விட்டதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதை உச்சநீதிமன்றத்தில் மோடியே ஒப்புக் கொண்டு விட்டார். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், விமான படையிடம் கேட்காமல் ஒப்பந்தத்தில் திருத்தங்கள் செய்திருப்பதாகவும், அனில் அம்பானியின் பையில் ரூ.30,000 கோடியை வைத்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியையும் ராகுல் காந்தி, சுட்டுரையில் தனது பதிவுகளுடன் சேர்த்து பதிவேற்றம் செய்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதில் ரஃபேல் போர் விமானத்துக்கான உதிரி பாகங்களை தயாரிப்பது தொடர்பாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்துடன் டஸால்ட் ஒப்பந்தம் செய்துள்ளது. இதை சுட்டிக்காட்டி, ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசு ஊழல் புரிந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனிடையே, ரஃபேல் போர் விமானங்களின் விலை தொடர்பான விவரங்களை வெளியிடக்கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ரஃபேல் போர் விமானங்களின் விலை குறித்த விவரத்தை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின்படி, உச்சநீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையில் ரஃபேல் போர் விமானங்களின் விலை, ஒப்பந்த நடைமுறை குறித்த விவரங்களை மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT