இந்தியா

ஆதார் தீர்ப்பு: உச்ச நீதிமன்றத்தக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் நன்றி

DIN

இந்தியாவை பாதுகாக்கும் காங்கிரஸின் தொலைநோக்கு சிந்தனைக்கு ஆதரவாக செயல்பட்ட உச்ச நீதிமன்றத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் நன்றி தெரிவித்தார். 

அரசு திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்றும், அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என்றும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு புதன்கிழமை தீர்ப்பளித்தது. 

மேலும், வங்கிச் சேவை, செல்ஃபோன் சேவை, பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்டவைக்கு ஆதார் கட்டாயமில்லை என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதே சமயம், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கோருவது சட்ட விரோதம் என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைப் பெறும் அதிகாரம் அளிக்கும் சட்டத்தை நீக்கியது. ஆதார் எண் தனித்துவமானது எனவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த தீர்ப்பை காங்கிரஸ் தலைவர் ராகுல் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

ஆதாரை அதிகாரமிக்க முன்னேற்றத்துக்கான கருவியாகவே காங்கிரஸ் கட்சி பாவித்தது. ஆனால் பாஜக-வுக்கு ஆதார் என்பது தனி மனிதன் மீதான ஒடுக்குமுறை மற்றும் கண்காணிப்புக்கான கருவியாகவே பயன்படுத்தி வருகிறது.

எனவே இவ்விவகாரத்தில் இந்தியாவை பாதுகாக்கும் காங்கிரஸின் தொலைநோக்கு சிந்தனைக்கு ஆதரவாக செயல்பட்ட உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT