இந்தியா

மேற்கு வங்கத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பக்தர்கள் உயிரிழப்பு

DIN

மேற்கு வங்கத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பக்தர்கள் உயிரிழந்தனர். 

மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானாவின் கச்சுவா என்ற இடத்தில் உள்ள கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பக்தர்கள் இன்று காலை திரண்டனர். அப்போது கோயிலின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. 

இந்த சம்பவத்தில் 4 பக்தர்கள் உயிரிழந்தனர். 27 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதனிடையே கோயில் சுவர் இடிந்து உயிரிழந்தோரின் குடும்தாருக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சமும் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

SCROLL FOR NEXT