இந்தியா

நாளை செய்தியாளர்களைச் சந்திக்கிறேன்: சிறையில் இருந்து வெளியே வந்த சிதம்பரம் பேட்டி!

DIN


ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் ப. சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியதையடுத்து, அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கடந்த 106 நாள்களாக சிறையில் இருந்தார். இந்த வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்ட நிலையில், அதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

இந்நிலையில், அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஆர். பானுமதி தலைமையிலான அமர்வு இன்று சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. எனவே, ப. சிதம்பரம் 106 நாள்களுக்குப் பிறகு தற்போது சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

அவரை வரவேற்க சிறை வளாகத்தின் வெளியே கூடிய காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக கோஷம் எழுப்பி அவரை வரவேற்றனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ப. சிதம்பரம்,

"நாளை நான் செய்தியாளர்களைச் சந்திக்கிறேன். 106 நாள்களுக்குப் பிறகு சுதந்திரக் காற்ற சுவாசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT