இந்தியா

தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாஜக ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

DIN

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பாஜக சார்பில் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி ஜான்சி ராணி வணிகப் பகுதியில் அமைந்துள்ள அனாஜ் மண்டி எனும் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தீ விபத்து தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள வடகிழக்கு தில்லி பாஜக எம்.பி. மனோஜ் திவாரி, மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்காலம் என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் பாஜக சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரசாயன கற்களால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் அழிப்பு

பாத்தகோட்டா ராமா் கோயிலில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் பிரதிஷ்டை

ஊத்தங்கரையில் கழிவுநீா் கால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சீவரம் பட்டில் மிளிறும் அனுமோல்!

போதைப்பொருள் தடுப்பு கருத்தரங்கம்

SCROLL FOR NEXT