இந்தியா

முத்திரைத்தாள் சட்டத் திருத்தம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

DIN


இந்திய முத்திரைத்தாள் சட்டம் - 1988-இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தார். 
கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நிதி மசோதாவுடன் சேர்ந்து இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 
இதன் மூலம் மாநில அரசுகள், பங்குச் சந்தை வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளில் முத்திரைத்தாள் கட்டணத்தை வசூலித்து கொள்ள முடியும். வரி ஏய்ப்பு நடவடிக்கைகள் முழுமையாக தடுக்கப்படும் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் மாநில அரசுகளின் வருவாய் ஆதாரம் அதிகரிப்பதுடன், பங்கு சந்தை வர்த்தகம் சார்ந்த நடவடிக்கைகளை நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் எளிதாக மேற்கொள்ள முடியும். இப்போது மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்துதான் பங்கு வர்த்தகம் தொடர்பான முத்திரைத்தாள் கட்டணம் 70 சதவீதம் அளவுக்கு வசூலாகிறது.
இப்போது, பங்கு சந்தை வர்த்தகத்தில் வாங்குவோர் மற்றும் விற்போர் என இருதரப்பினரும் இந்த முத்திரைத்தாள் கட்டணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. இனி யாராவது ஒரு தரப்பினர் மட்டும் செலுத்தினால் போதுமானது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தன்னாா்வலா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி

மேட்டூா் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்!

மலைக் கிராமங்களில் மரவள்ளி அறுவடையில் விவசாயிகள் மும்முரம்

வாழப்பாடி பகுதியில் கோடை மழை

மின் விபத்துகளைத் தடுக்க ஊழியா்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி

SCROLL FOR NEXT