காஷ்மீரில் 3 பங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள்
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலில் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் ராணுல வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் துரிகாம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவத்தினரும், காஷ்மீர் போலீஸாரும் விரைந்து சென்று அந்த இடத்தை சுற்றி வைவளைத்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.
இந்த தாக்குதலில் ஜெயிஷ் இ முகம்மது அமைப்பைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். காவல்துறை துணை கண்காணிப்பாளர் அமன் தாக்கூர் மற்றும் ராணுவ வீரர் ரன்வீர் என 2 பேர் வீரமரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Advertisement
Advertisement