ஜம்மு-காஷ்மீர்: பூஞ்ச் பகுதியில் 144 தடை உத்தரவு
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து பூஞ்ச் மாவட்ட ஆட்சியர் ராகுல் யாதவ் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
குறிப்பிட்ட சில பிரிவினர், மற்ற பிரிவினர் மீதும் பொது மக்கள் மீதும் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வன்முறையாகவும் மாறுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, மாவட்டத்தில் நிலவும் சட்டம், ஒழுங்கு நிலவரத்தைக் கவனத்தில் கொண்டு, மக்களுக்கு எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில், மாவட்டத்தில் 144 தடை உத்தரவு திங்கள்கிழமை முதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், மக்கள் வன்முறையில் ஈடுபடவும், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசவும், முழக்கங்கள் எழுப்பவும், ஆயுதங்கள் வைத்திருக்கவும், 5 நபர்களுக்கு மேல் ஓர் இடத்தில் கூடவும் தடை விதிக்கப்படுகிறது. இத்தடை உத்தரவையொட்டி, அனைத்து மதுபானக் கடைகளும், மதுக் குடிப்பகங்களும் மூடப்பட்டிருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.