முகப்பு
இந்தியா

35ஏ சட்டப்பிரிவு: உச்சநீதிமன்றத்தில் இந்த வாரம் விசாரணை?

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் அரசியலமைப்பு சட்டத்தின் 35ஏ பிரிவை எதிர்த்து தொடுக்கப்பட்ட மனுக்கள்

Updated On : 26 பிப்ரவரி 2019, 12:55 am IST
பகிர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் அரசியலமைப்பு சட்டத்தின் 35ஏ பிரிவை எதிர்த்து தொடுக்கப்பட்ட மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் இந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் எனத் தெரிகிறது.
உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை ஏதேனும் ஒரு நாளில் விசாரணைக்கு அந்த மனுக்கள் பட்டியலிடப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உச்சநீதிமன்றமும் இந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கும் மனுக்களின் பட்டியலில், வி தி சிட்டிசன்ஸ் அமைப்பு தாக்கல் செய்துள்ள மனுவை பட்டியலிட்டுள்ளது. முன்னதாக, இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைக்கும்படி உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசும், ஜம்மு-காஷ்மீர் அரசும் கோரிக்கை விடுத்தன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.