முகப்பு
இந்தியா

கைவிடப்பட்ட பசுக்களை பராமரிப்போரை கெளரவிக்க ராஜஸ்தான் அரசு முடிவு

மாடு வளர்ப்பவர்களால் கைவிடப்பட்டு தெருக்களில் சுற்றித் திரியும் வயதான பசுக்களை பாதுகாத்து பராமரிப்பவர்களை சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின்போது

Updated On : 15 ஜனவரி 2019, 1:10 am IST
பகிர்:


மாடு வளர்ப்பவர்களால் கைவிடப்பட்டு தெருக்களில் சுற்றித் திரியும் வயதான பசுக்களை பாதுகாத்து பராமரிப்பவர்களை சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின்போது கெளரவிக்க ராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பசுவதை தடைச் சட்டம் அமலில் உள்ளது. இதனால், அங்கு வயது முதிர்ந்த மற்றும் பால் வற்றிய மாடுகளை இறைச்சிக்காக பயன்படுத்த முடியாது. எனவே, மாடுகளை வளர்ப்போர், அவற்றால் பயனில்லை என்ற நிலை வரும்போது, பராமரிப்புச் செலவை சமாளிக்க முடியாமல் அவற்றை தெருவில் அடித்து விரட்டி விடுகின்றனர். இதனால், தெருக்களில் சுற்றித் திரியும் பசுக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த மாடுகள் தோட்டங்கள், வயல்களில் புகுந்து மேய்வதும் பெரும் பிரச்னையாக உள்ளது. கோசாலைகளிலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இடமில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தெருவில் விரட்டப்படும் பசுக்களை தத்தெடுத்து பராமரிப்பவர்களை மாவட்ட வாரியாக தேர்வு செய்து சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் கெளரவிக்க ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த மாநில பசு வளத்துறை இயக்குநர் விஷ்ராம் மீனா கூறியதாவது:
தெருவில் சுற்றித் திரியும் பசுக்களை தத்தெடுத்து பராமரிப்பவர்களை கெளரவிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 
தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் உள்ளிட்டோரை வயது முதிர்ந்த பசுக்களை பராமரிக்கும் செயலில் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசின் இந்ததத் திட்டத்துக்கு பசு மீது நேசம் கொண்ட அனைவரது ஆதரவும் தேவை என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments