இந்தியா

முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் படேலுக்கு அமலாக்கத் துறை சம்மன்

DIN


ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்கள் இணைப்பு தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

ஏர் இந்தியா - இந்தியன் ஏர்லைன்ஸ் இணைப்பின்போது, ரூ. 70,000 கோடி மதிப்பில் 111 விமானங்கள் போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டது. அப்போதைய மத்திய அரசின் இந்த முடிவு குறித்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்குக் கிடைக்க வேண்டிய திட்டங்கள் மற்ற வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்குக் கிடைத்தது தொடர்பாகவும் அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. 

இந்த வழக்கில், விமான விற்பனை இடைத்தரகர் தீபக் தல்வார் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் 30-ஆம் தீபக் தல்வார் தேதி துபையில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இதையடுத்து, கடந்த மார்ச் 30-ஆம் தேதி தீபக் தல்வாருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் அப்போதைய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் பெயரும் இடம்பெற்றது. 

இதைத்தொடர்ந்து, அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர், ஏர் அரேபியா, எமிரேட்ஸ் போன்ற வெளிநாட்டு விமான நிறுவனங்களின் சார்பாக தீபக் தல்வார், அப்போதைய அமைச்சர் பிரபுல் படேலுடன் தொடர்ந்து தொடர்பிலேயே இருந்தார் என்று கடந்த மே 1-ஆம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் வாதாடினார். 

இந்த நிலையில், பிரபுல் படேல் வரும் ஜூன் 6-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை பிடியாணை பிறப்பித்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT